கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்பன்‘ . முத்தைய இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் படத்தின் கதை குறிப்பிட்ட ஜாதியை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
மேலும் இந்தப் படத்தின் தலைப்புக்கும் எதிர்ப்பு கிளம்பினார். நாட்டில் பேசி தீர்க்க எத்தனையோ பிரச்சினைகள் இருக்க டாக்டர் கிருஷ்ணசாமி கொம்பன் படத்தை பற்றி தீடிரென பேசுவதற்கு என்ன காரணம்..? அவர் பேசும் அளவிற்கு கொம்பு சீவி விட்டது யார் என்பதுதான் அனைவரின் மனதிலும் எழும் கேள்வியாகும்.
கோலிவுட் வட்டாரங்களிலும் இது பற்றித்தான் பேச்சு அதிகமாக எழுந்துள்ளது. இந்நிலையில் தான் சில அதிர்ச்சிகள் தகவல்கள் கிளம்பியுள்ளது. கொம்பன் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் நண்பேன்டா படம் தான் தடுக்கிறதாம். எப்படி..? டாக்டர் கிருஷ்ணசாமியை தூண்டுவிட்டு வேடிக்கை பார்ப்பதே திமுக தானாம்.
ஏனெனில் உதயநிதி ஸ்டாலினின் இரண்டாவது படமான 'இது கதிர்வேலன் காதல்' படம் தோல்வியடைந்ததால் இப்போது அவர் நடித்து வெளிவர உள்ள 'நண்பேன்டா' படம் வெற்றி பெற்றால்தான் அவர் திரையுலகத்தில் தொடர்ந்து நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். அதனால், இந்தப் படம் வரும் போது அவர் எந்த போட்டியையும் விரும்பவில்லை என்கிறார்கள்.
'கொம்பன்' படம் ஒரு வாரம் கழித்து வந்தால், தங்களுக்கு எந்த போட்டியும் இருக்காது என்று நினைக்கிறார்களாம். அதேசமயம் விஜயகாந்தின் மகன் நடித்துள்ள சகாப்தம் படம் பற்றிய உதயநிதி தரப்பு கண்டுகொள்ளவில்லையாம். அவர்கள் கண் வைத்திருப்பது கொம்பன் படத்தின் மீதுதான். சமீபத்தில் நடந்த சில அரசியல் சந்திப்புக்களையும் இதற்கு திரையுலகத்தினர் மேற்கோள் காட்டுகிறார்கள்.
இதன் காரணமாக தான் கிருஷ்ணசாமியை வைத்து கொம்பனுக்கு கொம்பு சீவ விட்டிருக்கிறதாம் திமுக.. எது எப்படியோ இன்றைக்கு நீதிபதி சொல்லப்போகும் தீர்ப்பை வைத்துதான் ஏப்ரல் 2ஆம் தேதி கொம்பன் ரிலீஸ் ஆகுமா என்பது தெரியவரும்.
No comments:
Post a Comment