சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகராக ஜொலித்துக்கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் பலரும் வியந்து பார்க்கின்றனர். தற்போது இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் பிடித்த கதாநாயகன் யார் என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.
அனைத்து தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸிம் இவராக தான் இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகர் சிவகார்த்திகேயனை போன்று முன்னணி ஹீரோவாக மாற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து அதன்பின்னர் காதல் வைரஸ், முன் தினம் பார்த்தேனே, உயர்திரு 420, மற்றும் சமீபத்தில் ரிலீஸான 'இவனுக்கு தண்ணில கண்டம்' போன்ற படங்களில் நடித்திருப்பவர் தீபக்.
இவர் 'சிவகார்த்திகேயன் போல முன்னணி நாயகனாக மாறவேண்டும் என்பதே தனது லட்சியம்' என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் சின்னத்திரை சீரியல்களை விட சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், தற்போது நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நான் கடவுள்' ராஜேந்திரனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாராம்.
ஏற்கனவே 'இவனுக்கு தண்ணில கண்டம்' படத்தில் இருவரும் இணைந்து கொடுத்த நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிவகார்த்தியன் இடத்தை தீபக் பிடிப்பாரா என்பது தான் சந்தேகம். இருந்தாலும் அதற்கான விடை போக போக தான் தெரியும்.
No comments:
Post a Comment