இந்த வாரா பாக்ஸ் ஆபில் டிம் ஜான்சன் இயக்கியிருக்கும் ஹோம் (Home) என்ற அனிமேஷன் படம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் 52.11 மில்லியன் டாலர் (இந்தியா மதிப்பில் 326 கோடிக்கு மேல்) குவித்து முதலிடம் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் நகைச்சுவை படமான ஹெட் ஹார்ட் படம் 33.80 மில்லியன் டாலர்கள் (211 கோடிக்கு மேல்) குவித்துள்ளது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த சிண்ட்ரெல்லா படம் இந்த வாரம் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆனால் இப்படத்தின் வசூல் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. காரணம் சிண்ட்ரெல்லா கதைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சிண்ட்ரெல்லா கதையை எப்படி சொன்னாலும் அதை பார்க்கவும், படிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை 336.2 மில்லயன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் 2000 கோடிக்கும் மேல்) வசூல் செய்துள்ளது.
குறிப்பாக சைனாவில் இந்தப் படம் அதிகபட்சமாக 65.1 மில்லியன் டாலர்களை குவித்துள்ளது. யுஎஸ்ஸில் மட்டும் 150 மில்லியன் டாலர்கள். யுஎஸ் மற்றும் வெளிநாடுகள் அனைத்தும் சேர்த்து இதுவரை 336.2 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.
சரி இந்த வார ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் முதல் 10 இடங்களை பிடித்த படங்கள் பினவருமாறு..
01 Home= $52.11M (இந்தியா மதிப்பில் 326 கோடிக்கு மேல்)
02 Get Hard= $33.80M (211 கோடிக்கு மேல்)
03 The Divergent Series: Insurgent= $21.54M (134 கோடிக்கு மேல்)
04 Cinderella= $17.04M (106 கோடிக்கு மேல்)
05 It Follows= $3.81M (23 கோடிக்கு மேல்)
06 Kingsman: The Secret Service= $2.97M (18 கோடிக்கு மேல்)
07 Do You Believe?= $2.31M (14 கோடிக்கு மேல்)
08 Run All Night= $2.18M (13.5 கோடிக்கு மேல்)
09 The Second Best Exotic Marigold Hotel= $2.12M (13 கோடிக்கு மேல்)
10 The Gunman= $2.04M (12 கோடிக்கு மேல்)
No comments:
Post a Comment