விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கிவரும் ’புலி' படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கின்றனர். அவர்களுடன் முக்கிய வேடங்களில் நடிகை ஸ்ரீதேவியும், நான் ஈ சுதீப்பும் நடிக்கிறார்கள்.
பொதுவாக படப்பிடிப்பிலும் சரி, ரியல் லைஃப்லயும் சரி விஜய் அமைதியானவர், யாரிடமும் அதிகம் பேசமாட்டார், ஆனால் ஷாட் ரெடி ஓகே சொன்னதும் ஆளே மாறிவிடுவார் என்றுதான் சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். ஆனால் புலி படப்பிடிப்பில் தன்னை பார்ப்பவர்கள் அட எப்படி இருந்த விஜய் இப்படி ஆயிட்டாரே என்று வியக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறாராம்.
காரணம் அந்த அளவுக்கு படப்பிப்பில் சேட்டை செய்கிறாராம் விஜய். அவர் செய்த சில சேட்டைகளை பொறுமையாக பார்த்து வந்த சிம்புதேவன், அதை அப்படியே திரைக்கதையில் சேர்த்து விட்டாராம். புலி படத்தில் விஜய் செய்யும் காமெடி காட்சிகள், பெரும்பாலும் அவர் படப்பிடிப்பில் செய்த சேட்டைகளாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment