Monday, 30 March 2015

இன்றைய தினம்....!! (மார்ச் 31)


மார்ச் 31
1990
ஈழத்தில் இருந்து இந்திய அமைதிப் படைகள் திரும்பின
1987இல் இலங்கை - இந்தியா இடையேயான ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட இராணுவம் தான் இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force).
இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. இந்தியப் படைகள் இலங்கை சென்ற காலப்பகுதியில் திலீபன் என்பவர் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார்.
இதுவே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. மூன்று ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான பொது மக்களையும் இப்படை கொன்று குவித்ததாக இலங்கையில் இருந்த மூன்று ஆண்டுகளின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தேடும் சாக்கில் ஈழத்துப் பெண்களை கற்பழித்தும், வன்கொடுமைக்கு உட்படுத்தியும், பாலியல் சித்தரவதைகள் செய்தும் உள்ளதாக இந்திய அமைதிப் படைகள் மீது குற்றச்சாட்டுகளும் உண்டு.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1885 - இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.
1970 - 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
2007 - முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.
இன்றைய சிறப்பு தினம்
சுதந்திர தினம் (மால்டா)
சீசர் சாவெஸ் தினம் (ஐக்கிய அமெரிக்கா)
நிலநூல் நாள் (சோவியத் ஒன்றியம்)
சர்வதேச திருநங்கை நாள்

No comments:

Post a Comment