சமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா அணி பரிதாபமாக தோற்றது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியின் பேட்டிங் மிக மோசமாக இருந்ததுடன் 13 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
அதோடு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் தனது காதலன் விராட் கோலியை சப்போர்ட் செய்வதற்காக நேரில் சென்றிருந்தார். இதுவும் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இணையதள வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா இருவரையும் திட்டியும், கிண்டலடித்தும் வருகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு நடிகை அசின் வக்காலத்து வாங்கி இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அனுஷ்காவை திட்டுவது கேலிக்கூத்தானது. இந்திய அணியை ஆதரிக்க சென்றது அவ்வளவு பெரிய தவறா? சிலர் தங்களது முட்டாள்தனத்தை வேறு விதமாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்' என குறிப்பிட்டிருக்கிறார்.
இதுவரை அனுஷ்காவை கிண்டலடித்து வந்த ரசிகர்கள் இப்போது அசினிடம் பாய்ந்துவிட்டார்கள். அசினை போல் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென் உள்ளிட்ட பலர் அனுஷ்கா சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துவெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment