மார்ச் 30
1709
வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் நாட்காட்டியை எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்தார!!
ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.
பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் வழங்கியவர் இவர்.
ஆனந்தரங்கம் பிள்ளை 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார்.
இவரது நாட்குறிப்பில் அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவையும் பிரதிபலிக்கின்றன. இதனால், இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1822 - ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது.
1842 - அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
1867 – அமெரிக்காவின் முக்கிய இயற்கை அரணாகத் திகழும் அலாஸ்காவை 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²) என்ற வீதத்தில், 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, ரஷ்யாவின் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் II இடமிருந்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளர் வில்லியம் செவார்ட் வாங்கினார்.
இன்றைய சிறப்பு தினம்
உடல்நலத் திருவிழா (ரோம பேரரசு)
தேசிய மருத்துவர்கள் தினம் (அமெரிக்கா)
ஷௌடர் பாப்டிஸ்ட் விடுதலை நாள் (டிரினிடாட் மற்றும் டொபாகோ)
No comments:
Post a Comment