Sunday, 29 March 2015

இந்த வார ராசி பலன் (30/03/2015 - 6/03/2015)


தெரிந்து கொள்வோம்: மனித உடலும் ஆலயமும்
ஒரு மனித உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுக்குரிய அமைப்பாக மதிக்கப்படுகிறது. ஆலயத்தை "ஆ"+"லயம்" என பிரிக்க வேண்டும். "ஆ" என்றால் உயிர் என்றும், "லயம்" என்றால் லயிக்கின்ற என்றும் பொருள்.உயிர்கள் லயிக்கின்ற இடம் ஆலயம் எனப்படும். மனிதனின் இரண்டு பாதங்கள் கோயில் வாசல் கோபுரங்கள்.
கொடி மரத்தில் 32 வளையங்கள் இருக்கும். இது மனித உடலின் முதுகுத் தண்டில் உள்ள 32 எலும்பு வளையங்களைக் குறிக்கும். மனிதனின் நாபி ஸ்தானத்தைக் குறிக்க நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தீய குணங்களை இதயத்திலிருந்து நீக்கி பலியிடுவதைக் காட்டும் வகையில் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. புருவ மத்தியை கர்ப்ப கிரகம் என்கிறார்கள்.
மேஷம்
தந்தைக்காக மருத்துவ செலவு செய்யும் நிலை உருவாகும். மனதில் உண்டாகும் உணர்ச்சி கொந்தளிப்பை அடக்கிக் கொள்வது நல்லது. பகைவர்கள் தோல்வி அடைவார்கள். உடன்பிறப்புகளுடன் கருத்துவேறுபாடு உண்டாகும். படிப்பு மந்தமடையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அலங்கார ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். மஹாவிஷ்ணுவை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
ரிஷபம்
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வீடு பராமரிப்பிற்காக செலவுகள் செய்வீர்கள். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். மனதில் குழப்பமும் அழுத்தமும் அதிகரிக்கும். கடன் வாங்குவதில் கவனம் தேவை. புத்தி சரிவர வேலை செய்யாது. காரியங்களில் தடை உண்டாகும். வேல்முருகனை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
மிதுனம்
அரசாங்க ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் கடும் போட்டி உண்டாகும். கல்வி நிலை மேன்மையடையும். வீடு நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சகோதரர்கள் எல்லாவற்றிலும் உதவுவார்கள். சிவபெருமானை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
கடகம்
பூர்வீக சொத்தில் பிரச்சினை உண்டாகும். இல்லறத்துணையுடன் சச்சரவு உண்டாகும். வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். கமிஷன் வியாபாரம் சிறப்படையும். அண்ணன் தம்பிகளுக்கிடையே சச்சரவு அதிகரிக்கும். உல்லாசப் பயணம் செல்வீர்கள். தொழில் சுமாராக இருக்கும். குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். விநாயகரை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
சிம்மம்
தாய் மாமன் எல்லா விஷயங்களிலும் உதவிகரமாக இருப்பார். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. பொறுமையை கடைபிடிக்கவும். மன நிம்மதி குறையும். செலவுகள் அதிகரிக்கும். மின் சாதனங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. பெண்களால் யோகம் உண்டாகும். வாகனப் போக்குவரத்தில் கவனமாக இருக்கவும். ஆஞ்சநேயரை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
கன்னி
பணம் கையிருப்பு அதிகரிக்கும். தொழில் சிறக்கும். அரசு அதிகாரிகளின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். இயந்திரங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. தகவல் தொடர்பில் தடை உண்டாகும். தொழில் லாபம் அதிகரிக்கும். விபத்துகளுக்கு வாய்ப்புகள் அதிகம். காலபைரவரை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
துலாம்
வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும். லட்சுமிநரசிம்மரை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
விருச்சிகம்
இல்லறத்துணையினால் பிரச்சினை உருவாகும். குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். சிந்தனை தடுமாறும். சகோதரர்கள் எல்லாவற்றிலும் உதவுவார்கள். பெண்கள் விஷயங்களில் கவனம் தேவை. தந்தை வழி உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். படிப்பில் கவனம் செல்லாது. வங்கி சேமிப்பு அதிகரிக்கும். மஹாலட்சுமியை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
தனுசு
கல்வியில் தடை உண்டாகும். அப்பாவுக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். தலைவலியும் வயிற்று வலியும் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கமிஷன் புரோக்கரேஜ் தொழில் சிறப்படையும். கதை கவிதைகளில் ஈடுபாடு உண்டாகும். படிப்பில் மேன்மை உண்டாகும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் லாபத்தைத் தரும். அம்பாளை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
மகரம்
வியாபார விஷயங்களில் கவனம் தேவை. வாகன யோகம் உண்டாகும். உடன் பிறப்புகளால் கஷ்டம் உண்டாகும். பொருளாதாரம் மேன்மை பெரும். தொழில் முன்னேற்றம் அடையும். அப்பாவுக்கு விபத்துகள் உண்டாக வாய்ப்புகள் அதிகம். வெளியூருக்கு தேவையற்ற பயணம் செய்யும் நிலை உருவாகும். ஸ்ரீராமரை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
கும்பம்
குடும்பத்தில் சந்தோஷம் குறையும். கடன் வாங்கும் நிலை உருவாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். உறவினர்களுடன் நெருக்கம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். புத்தி கூர்மையாக வேலை செய்யும். பண வரவு செலவு விஷயங்களில் கவனம் தேவை. வீட்டு உபயோகப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாராத விபத்துகள் உண்டாகலாம். லட்சுமணனை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.
மீனம்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை உருவாகும். கோபத்தை அடக்கிக் கொள்வது நல்லது. சகோதரர்களால் தொல்லை உண்டாகும். செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். கை கால் பாதங்களில் வலி அதிகரிக்கும். ஆண்டாளை வணங்கி வாழ்க்கையில் வளம் பெறலாம்.

No comments:

Post a Comment