இந்த மாதம் எந்த பெரிய பட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆகாததால் வாரத்துக்கு ஏழெட்டு சின்ன பட்ஜெட் படங்கள் வெளிவந்தன. இதில் எந்தப்படமும் பெரிய வசூலை குவிக்கவில்லை, ரசிகர்கள் மனதிலும் நிலைக்கவில்லை.
ஆனால் ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம், கள்ளப்படம் ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களால் ஓரளவுக்கு பேசப்பட்டது. அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வலியவன் படம் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றாலும் நல்ல வசூலை குவித்துள்ளது.
கடந்த வாரம் சென்னை வசூல் முடிவில் சமீபத்தில் வெளிவந்த வலியவன் ரூ 67 லட்சம், இவனுக்கு தண்ணில கண்டம் 3 வாரங்களில் ரூ 64 லட்சம், ராஜதந்திரம் 3 வாரங்களில் ரூ 52 லட்சம் வசூல் செய்துள்ளது. தமிழுக்கு எண் 1யை அழுத்தவும் படம் 6 வாரங்களில் 1.12 கோடியும், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படம் 5 வாரங்களில் 4.47 கோடி வசூல் செய்துள்ளது.
No comments:
Post a Comment