பெங்களூரு ஐ.ஏ.எஸ்., ரவி தற்கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மீண்டும் ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் 16ம் தேதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.கே.ரவி தனது வீட்டில் தூக்கில் பினமாகக் கிடந்தார். அவரது உறவினர்கள், நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரவியை யாரோ கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர் என்று கூறினர்.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், ரவியின், கைபேசியில் இருந்த தகவல்களின் அடிப்படையில், அவர் உடன் பயின்ற பெண் அதிகாரியுடனான, கள்ளக் காதல் நிறைவேறாததால் தற்கொலை செய்து கொண்டார் என்று அறிவித்தனர். ரவி உறவினர்கள் இதை ஏற்க மறுத்தனர். அதே வேளை, வழக்கை காவல்துறையினர் திசை திருப்புவதாகத் தெரிவித்து வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் செய்தனர்.
இதனால் நாடு முழுவதும், இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், கர்நாடக முதல்வர் சித்தாராமையா, ரவி தற்கொலை செய்வதற்கு முன், ரோகினிக்கு 44 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இதனால் வழக்கு மேலும் சூடு பிடித்தது. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி ரோகினியின் கணவர் சுதீர் ரெட்டி, வழக்கின் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றத் தடை வாங்கினார்.
இதனை அடுத்து இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்ட பின்னர், ரவி செய்த 44 தொலைபேசி அழைப்பு உள்ளிட்டவை பொய் என்று தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கால் கர்நாடக எதிர்கட்சி தலைவருக்கும் முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கும், தற்போதைய முதல்வர் சித்தாராமையாவுக்கும் மோதல் ஏற்பட்டு பரபரப்பானது.
இந்நிலையில், காவல் சிஐடி பொலிஸாரிடம் மண்டியாவில் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி புதிய வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வாக்கு மூலம் பின்வருமாறு:
ரவியின் மர்மமான மரணம் தொடர்பான வழக்கு தொடர்பான நானாக முன்வந்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டியிடம் வாக்குமூலம் அளித்தேன். கடந்த 2009-ம் ஆண்டு நானும், டி.கே.ரவியும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்றோம், அப்போது இருந்தே இருவருக்கும் பணி நிமித்தமான நட்பு இருந்து வந்தது. நான் அவரது சொந்த மாவட்டமான துமகூருக்கு பணி அமர்த்தப்பட்ட போது அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.
மேலும் ரவி கோலார் மாவட்ட ஆட்சியராக இருந்த போது நானும், எனது கணவரும் அடிக்கடி அவரை சந்தித்து பேசி இருக்கிறோம், இதனால் இருகுடும்பமும் நண்பர்களை போன்று பழக ஆரம்பித்தோம். இந்நிலையில் தான் ரவியின் நடவடிக்கைகளில் எனக்கு சந்தேகம் எழுந்தது, இதுபற்றி நான் என் கணவரிடம் கூறியிருந்தேன்.
கடந்த மார்ச் 14-ம் திகதி இரவும், மார்ச் 15ம் திகதி மாலையும் ரவி எனக்கு தொடர்ச்சியாக வாட்ஸ் ஆப் மூலம் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தார், மார்ச் 16-ம் திகதி காலை முதலே குறுஞ்செய்திகள் அனுப்பினார், அதில், “நாம் அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம்... விரைவில் என்னுடைய மரணச் செய்தியைக் கேட்பாய்... நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறேன்'' என அனுப்பி இருந்தார்.
அன்றிரவு 8 மணி அளவில் ரவியின் மரண செய்தியை கேட்டபோது, நொறுங்கி போனேன். ரவியின் மரணம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே இந்த வாக்குமூலத்தை அளிக்கிறேன்.
ஏற்கனவே போலீஸார் வெளியிட்ட ரோகினியின் வாக்கு மூலத்தில், ஐ.ஏ.எஸ்., ரவி ரோகினியை, பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், கணவரை விட்டுவிட்டு புதிய வாழ்கை தொடங்க அழைத்ததாகவும், அதற்கு ரோகினி மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தன் கணவருக்கு சாதகமாக ரோகினி சி.பி.ஐ.,யில் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment