Thursday, 26 March 2015

பெற்றோரை கொன்று சடலங்களை வெட்டிய மகன்…!


தனது பெற்றோரை கொன்று அவர்களது சடலங்களை துண்டு துண்டாக வெட்டி மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்த பியானோ (piyano) வாத்தியக் கலைஞர் ஒருவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து ஹாங்காங் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
ஹென்றி சயு ஹொயி -– லுயெங் (31 வயது) என்ற மேற்படி பியானோ வாத்தியக் கலைஞர், தனது தாயாரான சியு யுயெட்- – யீ (62 வயது) மற்றும் தந்தையான சயு விங் –- கி (65 வயது) ஆகியோரை படுகொலை செய்து அவர்களது உடல் பகுதிகளை துண்டுகளாக வெட்டி உப்பிட்டு வாட்டப்பட்ட பன்றி இறைச்சியைப் போன்று சோற்று உணவுடன் சேர்த்து உணவு பெட்டிகளில் வைத்து பேக்கிங் செய்துள்ளார்.
தனது ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பணத்தை வழங்குவதற்கு பெற்றோர் இணங்காததையடுத்தே அவர்களை படுகொலை செய்வதற்கு ஹென்றி தீர்மானித்ததாக கூறப்படுகிறது. ஹென்றியின் தாய் மற்றும் தந்தையினது தலைகளும் உடல் பாகங்கள் சிலவும் குளிர்சாதனப்பெட்டி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி வழக்கை விசாரித்த ஹாங்காங் உயர் நீதிமன்ற நீதிபதி, ஹென்றியை மிகவும் அபாயகரமான ஒருவராக குறிப்பிட்டுள்ளார். ஹென்றிக்கு ஆயுள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக தனது பெற்றோரை சட்ட முறைப்படி நல்லடக்கம் செய்யத் தவறியமைக்காக 9 வருடங்கள், 4 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment