Friday, 27 March 2015

தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடும் 800 பெண்கள்..!!


சிரியா இராணுவத்தில் பெண்கள் பங்கேற்பது என்பது நான்கு வருடங்களுக்கு முன்னர் அறியப்படாத விசயமாக இருந்தது. ஆனால் தற்போது பெண்கள் இராணுவத்தில் அங்கம் வகிப்பதோடு இல்லாமல் அவர்கள் முன்னரங்குகளில் பீரங்கிகளையும் ஏவுகணைகளையும் செயற்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சிரியா டமஸ்கஸ் நகரின் புறநகர் பகுதிகளை கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் மூலம் பீரங்கிப் படையணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண் படைவீரர்களை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜொபார் பிராந்தியத்தில் மேற்படி பெண்கள் படையணியை சேர்ந்தவர்கள் கிளர்ச்சியாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட போதே இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் சிரியா இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு 2013 ஆம் ஆண்டிலேயே முதல் முதலாக அனுமதி வழங்கப்பட்டது. 'பெண் சிங்க பாதுகாப்பு படையணி' என செல்லப் பெயரால் அழைக்கப்படும் இந்த பெண்கள் படையணியில் தற்போது 800 பெண்கள் வரை அங்கம் வகிக்கின்றனர்.

No comments:

Post a Comment