Friday, 27 March 2015

’நான் ஓய்வு பெறுவது குறித்து நீங்களே முடிவெடுங்கள்’: தோனி!!


2015ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது.
இந்த தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் தோனியிடம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‘ஓய்வு தொடர்பாக நீங்கள் ஆராய்ச்சி செய்து என்ன எழுதுகிறீர்களோ, அதற்கு எதிர்மாறான முடிவை எடுப்பதுதான் சரியாக இருக்கும். எனவே நீங்கள் முதலில் ஆராய்ச்சி செய்யுங்கள்” என்றார்.
மேலும், விராட் கோலியின் ஆட்டம் குறித்து கூறும் போது, ‘இது எந்த ஒரு வீரருக்கும் நடப்பது தான். அவர் ஆடிய ஷாட்டுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை அவ்வளவு தான். இந்த விஷயத்தை யாரும் பெரிதாக்க வேண்டாம்.’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment