தமிழ் திரையுலகினர் பெரிய விருதாக நினைக்கும் 62-வது தேசிய விருதுகள் அண்மையில் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் தமிழில் சிறந்த படமாக 'குற்றம் கடிதல்' படம் தேர்வானது.
மேலும் சிறந்த துணை நடிகராக 'பாபி சிம்ஹா', சிறந்த குழந்தைகள் படமாக 'காக்கா முட்டை' என்று தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இதனால் விருது கிடைத்த கலைஞர்கள் மட்டுமல்லாமல் மொத்த தமிழ் சினிமா உலகமே பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாக திரையுலகினர் பலர் விருது வாங்கியவர்களை வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா திடீரென்று விருது வாங்கிய 7 பேருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதாவது தேசிய விருது கிடைத்த 7 பேருக்கும் தனது சார்பில் அழகான மலர் கொத்துகளை அனுப்பி வைத்து தனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கையில், நடிகர் சூர்யாவிடமிருந்தும் சர்ப்ரைஸ் வாழ்த்து வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தேசிய விருது கலைஞர்கள்..
இது குறித்து அவர்கள் கூறுகையில், சூர்யாவிடம் இருந்து திடீரென்று வாழ்த்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாகிட்டோம். அவர் ஒரு சிறந்த நடிகர் அவர் வாழ்த்தியது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினர்.
No comments:
Post a Comment