இஸ்ரேலில் சுமார் 1400 வருடங்கள் பழைமையான பண்டைய விளக்கு ஒன்று முள்ளம்பன்றியினால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் திருடர்களை கண்காணிப்பதற்காக ரோந்து சென்ற அதிகாரிகள் மர்மப் பொருள் ஒன்று கிடப்பதை கவனித்து அதை ஆராய்ந்தபோது, அது 1400 வருடங்கள் பழைமையான பண்டைய விளக்கு என்பது தெரியவந்தது.
முள்ளம்பன்றிகள் மிக சிறப்பாக நிலத்தை தோண்டும் திறமை கொண்டவை. ஏராளமான தொல்பொருள் பகுதிகளைக் கொண்ட நாட்டில் முள்ளம்பன்றிகள் நிலத்தடி பொருட்களுக்கு மத்தியில் தமது வாழ்விடங்களை அமைத்துக்கொள்கின்றன.
அவை மண்ணை கிளறி மேல்நோக்கி தள்ளும்போது இத்தகைய தொல்பொருட்களும் வெளிவருகின்றன" என இஸ்ரேலிய தொல்பொருள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment