Monday, 30 March 2015

ஐ.ஏ.எஸ்., தற்கொலை: மனைவி, மாமனார், காவல் துறை ஆய்வாளர் சேர்ந்து சதி..??


பெங்களூரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் தற்கொலை வழக்கில் நாளுக்கொரு திருப்பம் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த மார்ச் 16ம் தேதி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.கே. ரவி இறந்தார். இதை அடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் செய்த போராட்டத்தை அடுத்து காவலர்கள்வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இவரது மரணத்துக்குக் காரணம் உடன் பணியாற்றிய பெண் ஐ.ஏ.எஸ் உடனான ஒரு தலைக் காதல் தான் என்று காவலர்கள் தெரிவித்தனர். இதன் போது, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியின் வாக்கு மூலத்தையும் வெளியிட்டனர்.
இதில், பெண் அதிகாரி தன்னை ரவி பல முறை கற்பழித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. காவலர்களின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து வழக்கு சி.பி.ஐ.வசம் மாற்றப்பட்டுள்ளது.
சி.பி.ஐ.,யின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அணமையில், சி.பி.ஐ.,யிடம் பெண் அதிகாரி வாக்குமூலம் அளித்தார். இந்த முறை அறிக்கையில், காவலர்களிடம் தான் அளித்த அறிக்கையில் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை என்றும், ரவி தன்னிடம் எல்லை மீறி பேசியதும், தான் தன் கணவிரடம் இது குறித்து சொல்லி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் வழக்கில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து மேலும் ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. டி.கே.ரவி இறந்த பின், அவரது மனைவி குசுமா, மாமனார் ஹனுமந்தராயா, மடிவாளா காவல்நிலைய ஆய்வாளர் மூவரும் சேர்ந்து தடயங்கள் சில வற்றை அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சி.பி.ஐ.யின் வசம் வழக்கு கைமாறுவதற்கு முன்னதாக இந்த தடயங்கள் அழிக்கும் செயல் நடந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் டி.ஜே.ஆபிரஹாம் பெங்களூரு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment