Friday, 27 March 2015

தியேட்டரில் 50 ரூபாய்க்கு டிக்கெட் விற்றேன்.. ஷாருக்கான் உருக்கம்..!


இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவருடைய ஒவ்வொரு படங்களும் உலகம் முழுவதும் வசூல் மழைபொழியும். இவர் ஒரு படத்துக்கு ரூ. 50 கோடி முதல் 60 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அதுமட்டுமல்லாமல் விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்.
ஆனால் இவர் வெறும் 50 ரூபாய்க்கு தியேட்டரில் டிக்கெட் விற்றார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆமாம் இதை அவரே சொல்லியிருக்கிறார். சமீபத்தில் மும்பை பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஷாருக்கான் தனது ஆரம்ப கால வாழ்க்கை பற்றி நினைவு கூர்ந்தார். அவர் கூறும்போது, நான் நடிகனாவதற்கு முன்னால் தியேட்டர்களில் டிக்கெட் விற்பவராக பணியாற்றினேன்.
அப்போது எனக்கு 50 ரூபாய் சம்பளம் தருவார்கள். அது தான் என்னுடைய முதல் ஊதியம் என்று உருக்கமாக தெரிவித்தார். அதோடு அவர் வாழ்க்கையில் எப்படி படிபடியாக முன்னுக்கு வந்தார் என்பதையும், தன் வாழ்க்கையில் சந்தித்த அவமானங்களையும் கூறினார்.

No comments:

Post a Comment