கனடாவில் ஆபாச படங்களில் நடித்த வந்த சன்னி லியோன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்து அப்படியே பாலிவுட்டில் நடிகையாகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவர் ’ஏக் பஹேலி லீலா’படத்தில் நடித்து வருகிறார். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.
பாபி கான் இயக்கியுள்ள இந்த படத்தில் சன்னி லியோன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்று உள்ளது. இந்த பாடல் காட்சியில் கண்ணாடியை துடைத்து மாட்டும் ரஜினியின் ஸ்டைலை அப்படியே காப்பி செய்துள்ளாராம்.
சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போது பேசிய சன்னி லியோன், மக்கள் அவர்கள் என்னை எவ்வாறு விரும்புகிறார்கள் என்பதை முடிவெடுக்கலாம். நான் அப்படி என்ன இருக்கிறேன் நான் ஏன் என்னை மாற்றி கொள்ள வேண்டும். இதற்கு முன்னால் நான் அப்படி என்ன செய்து விட்டேன்.
நான் ஒவ்வொருவரின் வீட்டுக் கதவையும் தட்டி எனது கடந்த காலத்தை அழித்து விடுங்கள் என கூற முடியாது. அதற்காக நான் மன்னிப்பு கோரும் வகையில் நான் இல்லை. அல்லது எனது கடந்த காலம் மோசமானதாக போய்விடும். நான் என்ன செய்து விட்டேன். அது குறித்து எனக்கு வருத்தமோ அல்லது குற்ற உணர்வோ இல்லை.
என்ன தான் பல படவாய்ப்புக்கள் என்னை தேடி வந்தாலும், அனைவரும் என்னை செக்ஸ் நடிகையாக தன் பார்க்கிறார்கள். மேலும், பிரபல ஹீரோக்களின் மனைவி மார்கள், என்னுடன் நடித்தால் அவர்கள் கணவனை மயக்கி என் வலையில் விழ வைத்து விடுவேன் என்று எண்ணி அவளுடன் நடிக்க கூடாது என்கிறார்கள். உங்கள் கணவன் எனக்கு தேவையில்லை. எனக்கும் கணவர் இருக்கிறார், என்று கூறினார்.
No comments:
Post a Comment