ஆட்டோகிராப், திருப்பாச்சி, குண்டக்க மண்டக்க, திருப்பதி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை மல்லிகா.
தமிழ், மலையாளம் இரண்டிலும் நடித்து வரும் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் பெரிதாக இல்லை. இதனால் இயக்குநராக அவதாராம் எடுத்திருக்கிறார் மல்லிகா.
பாவனா நடிக்கும் "பழனியிலே கனகம்" என்ற மலையாளப் படத்தை இயக்கிவரும் அவர் இப்படத்தை இயக்குவதுடன், ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் நடிகைகளும், துணை நடிகைகளும் படக்குழுவினர்களால் என்னென்ன தொந்தரவுகள் அனுபவிக்கின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக படமாக்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த படத்தின் துணை நடிகை வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகள் யாரும் சம்மதிக்காததால், துணிச்சலாக நானே இந்த கேரக்டரில் நடிக்க முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.இந்த படம் நடிகைகளின் மறுபக்கத்தை அப்பட்டமாக வெளிக்கொண்டு வரவிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment