தமிழி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தற்போது இருக்கும் நடிகைகளெல்லாம் கனவாகவே இருக்கின்றது. சிலர் இதை வெளிப்படையாகவே சொல்லி இருக்கின்றனர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நஸ்ரியா, ஹன்சிகா, பிந்துமாதவி உட்பட இன்னும் ஒரு சில நடிகைகளை சொல்லலாம். ஏன் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா அஸ்வின் கூட அஜித்துடன் நடிக்க விரும்புவதாக அண்மையில் கூறினார். ஆனால், தற்போது சில நடிகைகள் அஜித்துடன் நடிக்க முதலில் ஓகே சொல்லிவிட்டு பிறகு நடிக்க மறுக்கிறார்களாம்.
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. இந்தப்படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் தான் ஒரு சில நடிகைகள் அஜித்துடன் நடிக்க முதலில் ஓகே சொல்லிவிட்டு பிறகு மறுத்துவிட்டார்களாம்.
ஏன்? எதற்காக? என்று விசாரித்தால், அந்த கதாபாத்திரம் அஜித்தின் தங்கச்சியாக வரவேண்டுமாம். எல்லோரும் முதலில் ஏதோ இரண்டாவது நாயகி என வந்துள்ளனர். ஆனால், இதை கேட்டு அஜித்துக்கு, தங்கச்சியாக எப்படி நடிப்பது? ஹீரோயின் சான்ஸ் இருந்தால் கூறுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார்களாம்.
No comments:
Post a Comment