ஹிமோ குளோபின் அளவை அடிக்கடி பெண்கள் சரிபார்ப்பது போல் ஆண்கள் யாரும் சரி பார்த்து கொள்வதில்லை.பெண்களுக்கு திருமணம் முடிந்ததும் கர்ப காலத்தில், பிரசவ நேரத்தில் இரத்ததின் அளவை மருத்துவர்கள் சரி பார்ப்பதால் ஹிமோ குளோபின் அளவு குறைவாக உள்ளதை கண்டு பிடித்து அதற்குறிய சிகிச்சையை அளிக்கின்றனர். என்ன உணவு உட்கொண்டால் ஹிமோ குளோபின் அளவு அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஆனால் ஆண்கள் தங்கள் ஹிமோகுளோபின் அளவை சரிபார்க்க வாய்ப்பே இல்லை. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஏதேனும் உடல் உபாதைகள் வரும் போது தான் தெரிய வருகிறது. ஆண்கள் படிப்பிற்க்காக மேற்படிப்பிற்காக ஹாஸ்டலில் தங்க வேண்டிய சூழ் நிலை,உள்ளூரிலேயே வேறு வேறு ஊர்களில் படிப்பு மற்றும் வேலை தேடுதல், வெளிநாடுகளில் படிப்பு மற்றும் வேலைக்காக செல்ல நேர்வதால் முறையான உணவுவகைகளை உட்கொள்வதில்லை.
பெற்றோர்களுடன் இருக்கும் வரை அவர்களுக்கு கவலை இல்லை சத்தான சாப்பாடு வீட்டு சாப்பாடு அம்மாவின் பராமரிப்பில் அமைந்து விடுகின்றன. ஆனால் இப்படி வெளியிடங்களுக்கு போய் சாப்பிடும் போது சிலருக்கு அந்த வகை சாப்பாடு ஒத்துக்கொள்ளவே நாள் எடுக்கும்.
அதே போல் வேலை பார்க்கும் ஆண்களும் பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் என குடும்பங்களை நேர் வழியில் கொண்டு செல்லவே சரியாக இருக்கு ஆனால் அவர்களுக்கு குறிப்பிட்ட வயதில் மன அழுத்தம் இயலாமை , உடல் சோர்வு , கிட்னி ஸ்டோன், ஈரல் வீக்கம், ஹெர்னியா , அல்சர் , வயிறு எரிச்சல் , ஹார்ட் அட்டாக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறை இரத்த அழுத்தம் , சர்க்கரை வியாதி ,கேஸ் பிராப்ளம் இது போல் பல வியாதிகளில் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு மாதிரியான நோய் சூழ் நிலை, உணவு , இருப்பிடத்தை பொறுத்து கண்டிப்பாக தாக்குகிறது.
இது போல வியாதிகளுக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் மன அழுத்தம், கவலை, சூழ்நிலையாகவும் இருக்கலாம்.
பச்சை கீரை வகைகள்,பச்சை காய்கறிகள்,பழச்சாறுகள், பேரிட்சை,புரோக்கோலி,பீட்ரூட், மாதுளை பழம், அத்தி பழம் ,ஆட்டு ஈரல்,கிட்னி, மட்டன் , மீன் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது.
கார்ன் பிளேக்சில் அதிக சத்து எல்லாமே அதில் கிடைத்து விடுகிறது, அனைத்து வகையான விட்டமின்களும் அதில் உள்ளது.தினம் பாலுடன் கார்ன் பிளேக்ஸ் கூட ஒரு கப் சாப்பிடலாம், ஓட்ஸ் கஞ்சி போல் காய்ச்சி குடிக்கலாம் ,தினம் அதை குடிக்க விரும்பாதவர்கள் ஓட்ஸ் காய்ச்சி அதில் சிறிது அவல் ஊறவைத்து சேர்த்து இனிப்புக்கு பதிலாக கிஸ்மிஸ் பழம் , சிறிது நட்ஸும் சேர்த்து சாப்பிட்டால் சுவையும் வித்தியாசமாக இருக்கும். சத்தும் அதிகம்.
வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவு போல் வெளியிடங்களில் இருக்காது ,சாப்பிடும் போது காய் கறி, மற்றும் கடல் உணவுகள் மட்டும் அதிகமாக எடுத்து கொள்வது நல்லது.
No comments:
Post a Comment