பாலிவுட் நடிகர் சயீப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பிக்கொடுப்பதற்கு அவர் சம்மதிக்கக்கூடும் என சயீப் அலி கானின் மனைவியான நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு சயீப் அலி கானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஆனால், 2012 ஆண்டு ஹோட்ட ஒன்றில் வைத்து தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரையும் அவரின் மாமனாரையும் தாக்கியதாக மும்பை நீதிமன்றமொன்றில் சயீப் அலி கானுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அதையடுத்து, சயீப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மீளப் பெற வேண்டும் என இந்திய அரசிடம் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இம்மனு பரீசீலனையில் இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சு கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக முதல் தடவையாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள கரீனா கபூர், "இவ்விசயம் குறித்து சயீப் அலி கானுடன் நான் கலந்துரையாடவில்லை. ஆனால், அதை திருப்பிக்கொடுத்துவிட்டு நிம்மதியாக இருப்பதை அவர் விரும்புவார்" எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment