Saturday, 28 March 2015

அகதிகள் தொகை 45 சதவீதத்தால் அதிகரிப்பு…!


வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலான அகதிகள் தொகை கடந்த வருடம் 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இது அகதிகள் தொகையில் கடந்த 22 வருட காலப் பகுதியில் இடம்பெற்ற அதி கூடிய அதிகரிப்பாக உள்ளது. கடந்த ஆண்டில் 866,000 பேர் புகலிடங்கோரியிருந்தனர். சிரியா மற்றும் ஈராக்கிலான மோதல்கள் மேற்படி அகதிகள் அதிகரிப்பில் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவான புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்ற நாடாக ஜெர்மனி உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் பெறப்பட்ட மொத்த புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களில் 30 சதவீதமாகும்.

No comments:

Post a Comment