தாய்லாந்தில் பாடும் பறவைகளுக்கான போட்டிகள் வருடாந்தம் நடைபெறுகின்றன. தென்பிராந்திய மாகாணமான நரதி வாத்திலுள்ள ருவேசோ நகரில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
கடந்த ஞாயிறன்று நடை பெற்ற இவ்வருடத்துக் கான போட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் தமது பறவைகளை பங்கேற்க செய்தனர். தாய்லாந்திலிருந்து மட்டுமல்லாமல், மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையானோர் தமது பறவைகளை இப்போட்டிகளில் பங்குபற்றச் செய்வது வழக்கமாகும்.
இப்பாடல் போட்டியில் பங்கேற்கும் பறவைகள் பல வர்ணத் துணிகளில் அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கூடுகளில் வைக்கப்பட்டிருக்கும். பறவைகள் பாடும் ஒலியின் அளவு, இனிமை உட்பட பல்வேறு விசயங்களின் அடிப்படையில் நடுவர்கள் அவற்றுக்கு புள்ளிகளை வழங்குகின்றனர்.
வெற்றிபெறும் பறவைகளின் உரிமையாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபா பரிசாக வழங்கப் படுகிறது.
No comments:
Post a Comment