பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை விதயாபாலன். 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் கவர்ச்சியாகவும், 'கஹானி' படத்தில் கர்ப்பிணி பெண்ணாகவும் நடித்து ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர்.
இவர் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் மனம் திறந்து சில விஷயங்களை கூறியுள்ளார். நான் சென்னையில் காலடி எடுத்து வைத்ததுமே எனது குழந்தை பருவம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. எனக்கு கமல்ஹாசனை ரொம்ப பிடிக்கும். என்னுடைய சிறுவயதில் நான் கமல்ஹாசனின் வீட்டிற்கு சென்றுள்ளேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக அன்று கமல்ஹாசன் வெளியூரில் இருந்ததால் அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. அதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த எனக்கு அவர் கையெழுத்திட்ட புகைப்படம் மட்டுமே எனக்கு அன்றைய தினம் கிடைத்தது' என்று தனது மலரும் நினைவுகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
மேலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிக்க தயார் என்றும் ஏனெனில் இந்த இரண்டு மொழிகளுமே என்னுடைய தாய்மொழிகள் என்பதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க நல்ல கேரக்டர் கிடைத்தால் தயார் என்றும் கூறினார்.
மேலும் சுசித்ரா சென் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பதாக வெளியாக தகவலில் உண்மையில்லை என்றும், அப்படி ஒரு படத்தில் நடிக்க நான் இதுவரை கமிட் ஆகவில்லை என்றும் பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.
No comments:
Post a Comment