செவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கியுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கியூரியோசிட்டி (Curiosity) விண்கலமானது அந்த கிரகத்தின் மேற்பரப்பில் பயன்பாடுமிக்க நைட்ரஜன் மூலக்கூறு இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
நைட்ரேட்டை சூடாக்கும் போது வெளியாகும் நைட்ரஜன் மூலக்கூறான நைட்ரிக் ஆக்சைட்டே செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நைட்ரஜனானது உயிரிகள் தோன்றுவதற்கான அத்தியாவசியமான மூலமாகும்.
இந்த நைட்ரிக் ஆக்சைட்டின் தோற்றத்திற்கு காரணமான நைட்ரேட் செவ்வாய்க்கிரகத்தில் காணப்படுவது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அந்தக் கிரகத்தில் நீண்ட காலத்திற்கு முன் உயிரினங்கள் வாழ்ந்திருப்பது சாத்தியம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment