Monday, 30 March 2015

தமிழர்கள் மீது திடீர் தாக்குதல்: மாலைத் தீவில் பயங்கரம் மாலைத்தீவில்


மாலைத் தீவில் இந்தியர்கள் மீதும் தமிழர்கள் மீதும் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மாலத்தீவில் சாலை நடந்து செல்லும் இந்தியர்கள், தமிழர்கள் மீது கண்மூடித் தனமான துப்பாக்கிச் சூடு தாகுதல் நடந்து வருகிறது. தக்குதலால் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தின் குமரி மாவட்டம் கல்லுக்கூட்டம், செறியாவட்டம் பகுதியை சாம் ஸ்டான்லி என்பவரும் இந்த தாக்குதலில் சிக்கி காயமடைந்துள்ளார். மாலத்தீவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அதிபரின் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் ஆளும் மாலத்தீவு அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று பிரின்ஸ் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்காக, தாக்குதலுக்கு உள்ளானவர்களின் புகைப் படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உட்பட மாலத்தீவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயங்களுடன் காணப்படுகின்ற வாலிபர்களின் படங்களும் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. இந்த புகைப் படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

No comments:

Post a Comment