ஏப்ரல் 1
ஏப்ரல் ஃபூல்ஸ் தினம்
ஏப்ரல் ஃபூல்ஸ் தினம் உலகம் முழுவதும் உள்ள மக்கள்ளால் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்திற்கு எந்நாட்டு அரசும் விடுமுறையை அறிவிக்கவில்லை. எனவே இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற கொண்டாட்ட தினமாகக் கருதப்படுகிறது.
இந்நாளன்று மக்கள் ஒருவரை ஒருவர் வேடிக்கையான பொய்கள் கூறி ஏமாற்றி விளையாடுவர். பெரும்பாலும் நம்பும் தன்மையுள்ள இந்த பொய்களால் ஏமார்ந்தவர்களை ஏப்ரல் ஃபூல் என்று அழைப்பர்.
உலகம் முழுவது இந்நாள் கொண்டாடப்பட்டாலும், பிரான்சில் தான் இந்நாள் தொன்றியதாக நம்பப்படுகிறது. இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.
இது ஒரு புத்தாண்டு தினம் என்ற வரலாறும் உண்டு. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.
இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள்.
இதலிருந்து ஏப்பிரல் ஃபூல்ஸ் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு.
அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. 1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
1935
இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது
இந்தியாவின் கரூவூலமாக செயல்படும் ரிசர்வ் வங்கி 1935ம் ஆண்டு இதே நாளன்று கொல்கத்தாவில் தனியார் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பின் 1949ம் ஆண்டு இவ்வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்டு இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள், மற்றும் பணப் பரிவர்தனைகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனமாக மாற்றப்பட்டது.
முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய ரிசர்வ் வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் ரிசர்வ் வங்கிக்கு 22 வட்டாரக் கிளைகள் உள்ளன.
இந்தியாவின் நாணயஙள் மற்றும் பணத்தை அச்சிடுவது, பழைய நாணயங்களை பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று அழிப்பது போன்றவை ரிசர்வ் வங்கியின் பணிகளாகும். இது தவிற நாட்டில் அந்நிய செல்வானியின் மதிப்பை நிர்ணயித்தல் வங்கிகளை மேற்பார்வையிடல் உள்ளிட்ட பல செயல்பாடுகளையும் இது செய்து வருகிறது.
பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றை கண்காணித்தும் வருகிறது.
இந்திய நாட்டின் நாணய மதிப்பு(அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1867 - சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.
2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.
இன்றைய சிறப்பு தினம்
ஏப்ரல் ஃபூல்ஸ் தினம்
சிவில் சேவை தினம் (தாய்லாந்து)
சமையல் புத்தக தினம்
புதைபடிவ முட்டாள்கள் தினம்
இஸ்லாமிய குடியரசு தினம் (ஈரான்)
ஒடிசா தினம் (ஒடிசா, இந்தியா)
No comments:
Post a Comment