தென் லண்டனில் அடிப்படை கட்டுமான தளமொன்றில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டொன்று வெடிக்காத நிலையில் செவ்வாய்க்கிழமை கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென் கிழக்கு லண்டனிலுள்ள சவுதவார்க்கில் 15 அடி நீளமும் 1000 இறாத்தல் நிறையுமுடைய மேற்படி குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பிராந்தியத்தை சேர்ந்த 1200 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் இரு பள்ளிகளிலிருந்த சிறுவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி குண்டு பாதுகாப்பாக செயலிழக்க வைக்கப்படும் வரை பிரதேசத்திலுள்ள மக்களை வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment