Friday, 27 March 2015

சன்னியின் ஆசையை.. நிறைவேற்றுவாரா சல்மான் கான்..!


சன்னி லியோனை பற்றி பெரிதாக சொல்ல தேவையில்லை. அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஏக்தா கபூரின் ’ஜிஸம் 2’ படத்தின் மூலம் அறிமுகமான சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் ஒரு நிரந்திர இடத்தை பிடித்துவிட்டார்.
இவர் தற்போது ஏக் பஹேலி லீலா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இளவரசி வேடத்தில் நடித்திருக்கும் சன்னி கவர்ச்சியிலும், காமத்திலும் புது வரலாறு படைத்து விட்டாராம்.
சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் டிரைலரைப் பார்த்து பலரும் மிரண்டு இருக்கிறார்களாம். டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்க போகிறதோ..? இது ஒருப்பக்கம் இருக்கட்டும் சன்னி லியோனுக்கு பிடித்த கதாநாயகன் யார் தெரியுமா..? சல்மான் கான் தானாம்.
சமீபத்தில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போது உங்களுக்கு எந்த கான் நடிகரை பிடிக்கும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, சல்மான் கான் தான் எனது பேவரைட் நடிகர். அவர் ஒரு சிறந்த மனிதர். அனைத்து வித்தைகளும் தெரிந்தவர்.
ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், சல்மான் கான், எனக்கு எவ்வாறு புடவை கட்டுவது எப்படி என்று அந்த இடத்திலேயே அவர் எனக்கு கற்றுத்தந்தார். அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று சன்னி லியோன் கூறினார். சன்னியின் ஆசையை சல்மான் கான் நிறைவேற்றுவாரா..?

No comments:

Post a Comment