Saturday, 28 March 2015

3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கார்..!


முப்பரிமாண தொழில் நுட்பத்தைப் (3D) பயன்படுத்தி கட்டடங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சீனாவானது தனது முதலாவது முப்பரிமாண காரை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
(வீடியோ கீழே)
மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்தக் காரின் விலை 1,700 அமெரிக்க டாலர் மட்டுமேயாகும். மின்சார சக்தியின் மூலம் செயற்படும் இந்தக் கார் தென் சீனாவில் ஹெய்னன் மாகாணத்திலுள்ள வீதிகளில் சோதனை ஓட்டம் நடத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இரு இருகைகளைக் கொண்ட இந்தக் காரை மூன்று நாட்களில் முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அச்சிட முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment