Thursday, 26 March 2015

என்னம்மா அங்க சத்தம்?? ஹீரோயின் கிடைக்கல மாமா!!?


சமீபகாலமாக புதுப்புது சப்ஜெக்ட்டுகளை தேடி பிடித்து நடித்து வரும் விஜய், தற்போது சிம்புதேவனின் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ‘நான் ஈ’ சுதீப் என ஒரு பெரும் படையே நடித்து வருகிறது.
இந்த படத்தை முடித்ததும் ’ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லீயின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இது உறுதியாகிவிட்டாலும், படத்தில் நடிக்கும் மற்றவர்கள் இதுவரை முடிவாகாமல் குழப்பமாகவே இருந்து வருகிறது.
இப்படத்தில் முதலில் நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது, பின்னர், எமி ஜாக்சன், சமந்தா என மாறிக் கொண்டே போனது. இதுவும் உறுதியில்லை. அதேபோல, வடிவேலு, பாரதிராஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர்களும் நடிக்கவில்லை என்று கோடம்பாக்கம் கூறுகிறது.
இன்னும் எப்படியும் 2 மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படலாம் என்று இருக்கும் நிலையில் மற்ற நடிகர்கள் யார் யார் என்பது முடிவாகாமல் இழுத்தடித்துக் கொண்டே போகின்றனர்.

No comments:

Post a Comment