Monday, 30 March 2015

’கொம்பன்’ படம் ரிலீஸ் ஆகுமா..? ஆகாதா..?


’குட்டி புலி’ படத்தை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் ‘கொம்பன்‘ படத்தை இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கிடையில் படத்துக்கு ‘யு ‘ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியானது. ஏப்ரல் 2ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பது தவறு என்று தணிக்கை குழு தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார் கிருஷ்ணசாமி. அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்," என்று தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரோ, "அப்படி எதுவும் நிகழாது'' என்றார்.
உடனே நீதிபதி தமிழ் வாணன், "சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா?'' என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இதற்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகலில் பதில் வந்தபிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார். இன்று மதியம் நீதிபதியின் தீர்ப்பில், திட்டமிட்டபடி ‘கொம்பன் ரிலீசாகுமா? இல்லை தடை செய்யப்படுமா? என்பது தெரியவரும்.

No comments:

Post a Comment