பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படம் மூலம் தமிழில் பிரபலமானவர் ராதிகா ஆப்தே. கடந்த சில மாதங்களாக இவரை பற்றிதான் மீடியாக்களில் ஒரே பேச்சாக இருக்கிறது. காரணம் இவருடைய பெயரில் சமீபத்தில் நிர்வாண செல்ஃபிக்கள் வாட்ஸ் அப்பில் தீயாக பரவியது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த சர்ச்சை தொடர்ந்து ஹாலிவுட் படம் ஒன்றிற்காக நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அண்மையில் தெலுங்கு திரையுலகம் குறித்த இவர் தெரிவித்த கருத்து ஒன்று டோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “தெலுங்கு சினிமா ஆணாதிக்கம் கொண்டவர்களின் பிடியில் சிக்கியுள்ளது. என்னால் இங்கே நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும் என தோன்றவில்லை” என்று ராதிகா ஆப்தே தெரிவித்திருந்தார்.
இதனால் கோபமடைந்த தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நடிகை ராதிகா ஆப்தே புறக்கணிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தெலுங்கு பிரபலங்கள் சிலர் ராதிகா ஆப்தேவை கண்டப்படி திட்டி வருகின்றார்களாம்.
தெலுங்கு திரையில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே தற்போது மீண்டும் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக லயன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவரது கருத்து தெலுங்கு திரையில் அவரது வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment