Thursday, 26 March 2015

நீ ‘புலி’ன்னா, நான் ‘பாயும் புலி’… விஜய்க்கு போட்டியாக விஷால்!!?


விஜய் ‘கத்தி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அடுத்த வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் சிம்புதேவனின் ‘புலி’ படத்தில் நடித்து வருகின்றார் என்பது நாம் அறிந்த ஒரு விஷயம் தான்.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் நடிக்கும் படத்திற்கு ‘பாயும் புலி’ என்று பெயர் வைத்துள்ளனர். மிகவும் கஷ்டப்பட்டு இந்த டைட்டிலை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது ரஜினிகாந்த் நடித்த படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரஜினி நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற தலைப்பை தன் படத்திற்கு வைத்திருந்தார் விஷால், தற்போது மீண்டும் ரஜினி படத்தின் தலைப்பையே தன் படத்திற்கு வைத்துள்ளார்.

No comments:

Post a Comment