ஹாங்காங் நடிகர், ஆக்ஷன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து பல்வேறு சாதனைகளைப் படைத்திருப்பவர் நடிகர் ஜாக்கிசான்.
காமெடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பெரும்பாலும் ரசிகர்களால் ரசிக்கப்படுபவர். அகில உலக சூப்பர் ஸ்டாராக இருக்கும் இவருக்கு பிடித்த இந்திய நடிகர் யார் தெரியுமா.? பாலிவுட் நடிகர் அமீர்கான் தான்.
சமீபத்தில் வெளியான ஜாக்கிசான் நடித்த 'ட்ராகன் பிளேடு' படம் குறித்த பேட்டி ஒன்றின்போது, அவரிடம் பாலிவுட் படங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. தான் பாலிவுட் படங்களை தொடர்ந்து பார்ப்பதில்லை என்றாலும் பார்த்தவரையில் தன்னைக் கவர்ந்தவர் என்று அமீர்கானையே குறிப்பிட்டுள்ளார் ஜாக்கிசான்.
அதற்கு முக்கிய காரணமாக அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படத்தை தான் விரும்பி பார்த்து ரசித்ததாகவும் சொல்லியிருக்கிறார். அந்தப் படம் ஹாங்காங்கில் மிகப்பெரிய ஹிட் என்றும், அதிலிருந்து, தான் அமீர்கானின் ரசிகன் ஆகிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் ஜாக்கிசான்.
No comments:
Post a Comment