Friday, 27 March 2015

உதயநிதி மனைவி உடன் சிம்பு.. இதுவாவது வெளிவருமா..?


சிவா, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்த வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகாஉதயநிதி. முதல் படமே பெரிய இளம் கூட்டணியுடன் களம் இறங்கினாலும் படம் எதிர்பார்த்தப்படி போகவில்லை.. ஓரளவுக்கு தான் பேசப்பட்டது.
இவர் அடித்ததாக என்ன படத்தை இயக்க போகிறார், யாரை வைத்து இயக்கப்போகிறார் என்று இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது. கிருத்திகாவின் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கும் அனிருத் தான் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகையிடம் பேசி வருகிறார்களாம். இப்படத்தை அழகான காதல், ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் கலந்த கமர்சியல் படமாக உருவாக்க இருக்கிறார்களாம். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இம்மாத இறுதியில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சிம்பு நடிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அவர் நடித்துள்ள வாலு, வேட்டை மன்னன் மற்றும் இது நம்ம ஆளு ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது என்று சொல்ல்ப்பட்டாலும் இதுவரை வெளிவந்தப்பாடு இல்லை. இதனால் இந்தப்படமாவது வெளிவருமா..? என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment