மார்ச் 28
1942
விடுதலைப் போராட்ட வீரரும், காமராசரின் குருவுமான சத்தியமூர்த்தி மறைந்தார்
எஸ். சத்திய மூர்த்தி, இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், காங்கிரஸ் தலைவரும் ஆவார். இவர் பிரித்தாணிய இந்தியாவில், மக்களாட்சி மலர பெரிதும் பாடுபட்டவர்.
பிரித்தாணிய இந்தியாவில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற பெரிதும் பாடுபட்டார். அவரது நினைவாகத் தான் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் சத்திய மூர்த்தி பவன் என்று பெயரிடப்பட்டது.
இவரது சீடர்களுள் மிக முக்கியமானவர் காமராசர். 1944ம் ஆண்டு சத்திய மூர்த்தி மேயரான போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போர் மூண்டிருந்த அந்த நேரத்தில் ஆங்கிலேய அரசுடன் போராடி பூண்டி நீர் தேக்கத்திற்கான வரைவு ஒப்புதலைப் பெற்று அடிக்கல் நாட்டினார்.
ஆனால், நீர்த்தேக்கம் கட்டி முடிக்கும் வரை அவர் உயிருடன் இல்லை. 1944ம் ஆண்டு காமராசரின் ஆட்சிக் காலத்தில் இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டது. சத்திய மூர்த்தியின் நினைவாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இவரது பெயரையே இட்டார், காமராசர்.
1942ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு,1943ஆம் ஆண்டு இதே தினத்தன்று சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1802 - ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1930 - கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
2006 - வேதாத்திரி மகரிஷி, தத்துவஞானி இறந்தார்.
இன்றைய சிறப்பு தினம்
ஆசிரியர் தினம் (சிலோவேக்கியா, செக் குடியரசு)
அடிமை ஒழிப்பு தினம் (திபெத்)
No comments:
Post a Comment