டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று சமூகத்தளங்களில் மாட்டிக்கொண்டு விழிபிதிங்கி நிற்கிறார்கள் திரையுலக பிரபலங்கள் பலர்... சர்ச்சை, ஆபாசம், ரசிகர்களின் கிண்டல் என்று அனைத்தையும் தாங்கிக்கொண்டு எதையும் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர் திரையுலகினர்.
இதுவாது பரவாயில்லை. டுவிட்டரில் நேற்று புதுப் பஞ்சாயத்தைக் கூட்டி விட்டனர் குசும்புக்காரர்கள். ‘காத்ரீனா கைப்' காணவில்லை என்று ஹேஷ்டேக் போட்டு அது டிரெண்ட் ஆகி பரபரப்பையும் கிளப்பி விட்டு விட்டனர். கடந்த திங்கள் கிழமையில் இருந்தே #KatrinaMissing என்ற வார்த்தை டுவிட்டரில் டிரெண்டிங் ஆகியிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஹேஷ்டேகில் பலரும் காத்ரீனாவுக்கு என்னாச்சு, எங்கு போனார் என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். அப்போது ஒரு சிலர் அவர் லோரியல் பாரீஸ் பெமீனா மகளிர் விருது விழாவுக்குப் போயிருப்பதாக கூறினர்.
மேலும் இந்த செய்தி கத்ரீனாவின் காதுக்கு போனதாகவும், அதைக் கேட்டு அவர் சிரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தான் டுவிட்டரில் இல்லை என்பதால் இதுகுறித்து தனக்குத் தெரியவில்லை என்று காத்ரீனா கூறினாராம். ஏம்பா இப்படியெல்லாம் பீதியை கிளப்புறிங்க...

No comments:
Post a Comment