பிரிட்டனின் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தனது மீன்பிடி வலையில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பலொன்று சிக்கியதாக நம்புகிறார்.
46 வயதான எங்கஸ் மெக்லியொட் எனும் இம்மீனவர், ஸ்கொட்லாந்தின் ஹேப்ரிட்ஸ் பிராந்தியத்துக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பெரிய பொருளொன்று தனது மீன்பிடி வலையில் சிக்கி வலையை இழுத்துச் சென்றதாகவும் பின்னர் வலையுடன் இணைக்கப்பட்டிருந்த கயிறொன்று அறுந்ததாகவும் கரையோர காவல் படையினரிடமும் கடல் விபத்து விசாரணைப் பிரிவினரிடமும் தெரிவித்துள்ளார்.
62 அடி நீளமான மேற்படி மீன்பிடிப் படகில் அங்கஸுடன் மேலும் நால்வரும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக தமக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வலையில் சிக்கிய மேற்படி மர்மப்பொருள் ரஷ்யாவின் நீர்மூழ்கி ஒன்றாக இருக்கலாம் எனவும் அங்கஸ் தெரிவித்துள்ளார். சிலர் அது திமிங்கிலமொன்றாக இருக்கலாம் என நம்புகின்றனர்.
ஆனால், அது திமிங்கிலமாக இருந்தால், வலையில் சிக்கியபின் துள்ளியிருக்கும் இதற்குமுன்னர் எமது வலைகளில் திமிங்கிலங்கள் சிக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அங்கஸ் மெக்லியொட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment