குடிபோதை தலைக்கேறிய நிலையில் மாடி பால்கனியில் இருந்து தவறிவிழுந்த நபரொருவர், 8 வது மாடியிலிருந்த கம்பிச் சட்டமொன்றை கைகளால் பற்றியவாறு அந்தரத்தில் தொங்கிய விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஹெசிகோ நகரிலுள்ள தனது மாடிக் குடியிருப்பு வீட்டின் சுவரில் அமர்ந்திருந்தவாறு யு யங் (48 வயது) என்ற மேற்படி நபர் குடிபோதையில் பாடிக்கொண்டிருந்த சமயமே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அச்சமயம் அவருக்கு அருகில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்துள்ளனர்.
கம்பிச் சட்டத்தை பற்றியவாறு அந்தரத்தில் தொங்கிய யு யங்கை மேலே தூக்குவதற்கு அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியது. எனினும் அவரது குடும்பத்தினர் யு யங் கீழே விழாது தடுக்க அவரது கையை கம்பி சட்டத்துடன் கயிற்றால் கட்டினர். தொடர்ந்து அவசர சேவைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டதை அடுத்து யு யங் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
No comments:
Post a Comment