இந்தியாவின் முன்னாள் முதல்வர் வாஜ்பாயிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம், அரசு அறிவித்தது. தற்போது உடல்நலக் குறைவால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருக்கும் வாஜ்பாயிக்கு வீட்டிலேயே பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு முன் இந்திய பிரதமராகப் பதவி வகித்தவர் வாஜ்பாயி. கடந்த டிசம்பர் 24ம் தேதி, பா.ஜ.க.,வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு, வரும் மார்ச் 30ம் தேதி ராஷ்ட்ரபதி பவனில், பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மோடி தலைமையிலான பா.ஜ.க., அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் வாஜ்பாயியின் வயது முதிர்ச்சியால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரால் வீட்டை விட்டு வெளியில் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாளை 27ம் தேதி அவரது இல்லத்திற்கே சென்று பாரத்னா விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதை வாஜ்பாயி இல்லத்திற்கு சென்று வழங்க உள்ளார். அவருடன் அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரும் செல்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment