Thursday, 26 March 2015

22 கோடிய முழுங்கிடுச்சு!! இதுல விருதுக்கு அனுப்பலனுதான் குறை!!!


இந்த வருடத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் தனது காவிய தலைவன் படத்தினையும் தேசிய விருதுக்கு அனுப்பி இருக்கலாமே என்று தோன்றியதாம்.
சென்ற வருடம் வெளியான காவியத் தலைவன் படத்துக்கு விளம்பரம் அது இது என்று சுமார் 22 கோடிக்களுக்கும் மேலாக செலவாகியது. ஆனால், படத்தின் வசூல் என்னவோ பாதி கூட கிடைக்கவில்லை. எனினும் படத்தினை பல பிரபலங்கள் பாராட்டினர்.
படத்தினை விருதுக் கமிட்டிக்கு அனுப்பியிருக்கலாம் என்று இயக்குனர் வசந்தபாலன் தயாரிப்பாளரிடம் கூறியிருக்கின்றாராம். கடுப்பான தயாரிப்பாளர், ’22 கோடியை முழுசா முழுங்கிடுச்சு, இதுல விருது ஒன்னுதான் குறைச்சலா?? போய் வேற வேலைய பாருங்க சார்’ என்று கூறியுள்ளாராம்.

No comments:

Post a Comment