Wednesday, 25 March 2015

தீவிரவாத தாக்குதல் இல்லை, 6000 அடி உயரத்தில் மீட்பு பணிகள் தீவிரம்…!


பிரான்ஸ் எல்ப்ஸ் மலை தொடரில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதோடு விமான விபத்துக்கு தீவிரவாத தாக்குதல் போன்று தெரியவில்லை என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
எல்ப்ஸ் மலை பகுதியின், 6000 அடி உயரத்தில் போலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பார்ஸிலோனாவிலிருந்து டுசெல்டோர்ஃப்க்கு சென்ற லுஃப்தான்ஸா விமான சேவையின் இணை நிறுவனமான ஜெர்மன்விங்க்ஸ் விமான சேவையின் ஏ 320 ரக பயணிகள் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையிலேயே இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டஸ்செல்டார்ப் நகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment