தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருப்பர் சமந்தா. இவரும் நடிகர் சித்தார்த்தும் தீவிரமாக காதலித்து வருவதாக கடந்த இரண்டு வருடங்களாக ஊடகங்களில் கிசுகிசுக்கள் பரவி வந்தது.
ஏன் ரகசியமாக இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்று கூட தகவல்கள் வெளியானது. இந்த நிலையில்தான் திடீரென இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆனால் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாகவும் அதனால் தான் சித்தார்த்தை கழட்டி விட்டார் என்றும் கூறப்பட்டது. சமந்தா அதை மறுத்தார். பிறகு இதையெல்லாம் கேர் செய்துகொள்ளாமல் சமந்தா சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டார்.
இந்நிலையில் சமந்தா தற்போது தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொழில் அதிபர் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் ரகசியமாக சந்தித்து பேசுகிறார்கள். விரைவில் இந்த காதல் விவகாரம் அம்பலத்துக்கு வரும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இதை அறிந்த சித்தார்த் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment