ஈராக் மற்றும் சிரியாவை கிட்டத்தட்ட முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தனி அரசாங்கத்தையே நடத்தி வருகின்றனர்.
இவர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் பகுதிகளில் கொலை, கொள்ளை, ஓரினச்சேர்க்கை, கள்ளக்காதல் மற்றும் மதத்தை அவமதிக்கும் செயல்களுக்கு மரண தண்டனை அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், ஈராக்கின் பெருநகரமான மொசூல் நகரில் ஒரு ஜோடி கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளது.
இது ஐ.எஸ் அமைப்பினருக்கு தெரியவர அந்த ஜோடியை நடுத்தெருவுக்கு இழுத்து வந்து மக்கள் முன்னிலையில் கல்லால் அடித்து மரண் தண்டனையை நிறைவேற்றியிருக்கின்றனர்.

No comments:
Post a Comment