இந்த வருடத்திலேயே சிவகார்த்திகேயன் படம் தான் அதிகமான லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கிறதாம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தான் அதிகமான படங்கள் ரிலீஸாகும் என்று தெரிகிறது. காரணம் வாரத்துக்கு 10 படங்கள் வீதம் களம் இறங்குகிறது. குறைந்தது ஆறேழாவது வருகிறது.
ஆனால் இதெல்லாமே சின்ன பட்ஜெட் படங்கள் தான். பெரிய பட்ஜெட் படங்கள் என்று பார்த்தால் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தான் வருகிறது. இப்படி வாரத்துக்கு பத்து படங்கள் இறங்கினாலும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்த படம் எதுவென்றால் அது காக்கி சட்டை படம் தானாம்.
இந்த வருடம் ஆரம்பத்திலேயே ஐ, ஆம்பள, டார்லிங் என வரிசையாக படங்கள் களம் கண்டது. இதில் ஐ படம் நல்ல வசூலை தந்தாலும், படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் சுமார் லாபம் தான். அதேப்போல் தான் ஆம்பள படம். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணமாக தீடீரென்று வெளியான டார்லிங் படம் பட்ஜெட்டை விட ஓரளவுக்கு அதிகமான வசூலை கொடுத்தது.
அதற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய என்னை அறிந்தால் படம் வசூலில் ரூ 100 கோடியை தாண்டியதாக சொன்னாலும், படத்திற்கு வரிவிலக்கு அளிக்காததால் ஹிட் வரிசையில் மட்டும் இடம்பெற்றுள்ளது. அனேகன் படத்தின் வசூல் ரூ 60 கோடி என்று பில்டப் கொடுத்தாலும் உண்மையாகவே இப்படத்தினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளதாம்.
ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த காக்கிசட்டை படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும், வசூலில் எந்த பாதிப்பு இல்லாமல் ரூ 50 கோடியை தாண்டியுள்ளதாம். மேலும், இப்படத்தின் பட்ஜெட் சுமார் 12 கோடி தான் என்பதால், இந்த வருடத்தில் அதிக லாபம் கொடுத்த படம் காக்கிசட்டை தானாம்.

No comments:
Post a Comment