Wednesday, 25 March 2015

விஷம் குடித்த லிங்கா விநியோகஸ்தர்!!??


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான படம் லிங்கா.
படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்தினர். ஒரு வழியாக ரஜினியும் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கொடுத்தும் விட்டார். ஆனால் தற்போது இதனை பிரித்துக் கொள்வதில் தான் விநியோகஸ்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
லிங்கா படத்தை திருநெல்வேலி ஏரியாவில் ஐய்யப்பன் என்பவர் வாங்கி விநியோகம் செய்துள்ளார். மேலும் முன்பணமும் வாங்கியுள்ளார். படம் நஷ்டமடைய தற்போது திரையரங்க உரிமயாளர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
நஷ்ட ஈடுக்கான பணம் வந்த உடன் பணம் தருவதாக கூறியுள்ளார் ஐய்யப்பன். ஆனால் பணம் பிரிக்கப்பட்டும் இன்னும் இவருக்கான பங்கு வந்து சேரவில்லையாம். இதனால் மனமுடைந்த ஐய்யப்பன் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment