முதல் படத்தில் நடித்து படம் வெளியவதற்கு முன்பே அகில இந்திய கார்த்தி ரசிகர் மன்றத்தினை ஆரம்பித்தார். ஆனால் இதுவரைக்கும் அவர் ரசிகர்களை நேரடியாக சந்தித்ததே இல்லை.
தற்போது சமீபமாக எந்த ஒரு படங்களும் வெற்றிபெறாமல் தொடர் தோல்வியை சந்தித்த கார்த்திக்கு மெட்ராஸ் ஆறுதல் அளித்தது. இந்நிலையில் தனது அடுத்த படமான கொம்பன் வெளியிட தயாராகி விட்டார்.
இப்படத்தில் லட்சுமி மேனன், ராஜ்கிரண், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் அடுத்த மாதம் வெளியாவதை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்தார் கார்த்தி.
அப்போது ரசிகர்கள், ‘உங்களுக்கு ஹீரோ கேரக்டர் வேலைக்கே ஆகாது, பேசாம வில்லன் கேரக்டர் ட்ரைப் பண்ணுங்க’ என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு வெறுத்துப் போய்விட்டாராம் கார்த்தி.
No comments:
Post a Comment