ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சி ’சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சியை லண்டன் நகரில் பிரம்மாண்டமாக நடத்தவிருக்கின்றது விஜய் டிவி.
வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி விம்ளேவில் உள்ள SSE Areaனாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், அனிருத், எஸ்.பி பால சுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 சீசனில் கலக்கிய ஸ்பூர்த்தி, ஜெஸ்ஸிகா, அனுஷ்யா, பரத், ஹரிப் பிரியா மற்றும் ஸ்ரீஷா ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் குரலால் லண்டன் தமிழர்களை மகிழ்விக்க உள்ளனர்.
மேலும், இவர்களுடன் முந்தைய சீசன்களில் கலக்கிய திவாகர், பூஜா மற்றும் ப்ரவீன் சைவி ஆகியோரும் இணைந்து கலக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளர்களான திவ்ய தர்ஷினி மற்றும் ’நீயா நானா’ கோபிநாத் இருவரும் தொகுப்பாளர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் 9th Annual Vijay Awards-ன் Global Launch-ஐ தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து செய்ய உள்ளனர். இதற்கான ப்ரமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் தனுஷ்.
வீடியோ கீழே...
No comments:
Post a Comment